தொடர்புடைய செய்திகள்
- மனைவியோடு சண்டை… அதற்கு கணவன் செய்த செயல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு ...சிறுவன் தற்கொலை
- நான் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு அந்த இயக்குனர்தான் காரணம்… நடிகை பகீர் குற்றச்சாட்டு!
- காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள்… செய்த செயலால் பக்தர்கள் அதிர்ச்சி!
- ஆன்லைன் ரம்மி மோகம்; காசு தராததால் கோபம்! – சிறுவன் எடுத்த விபரீத முடிவு!
இரு குழந்தைகளை தீக்குக் இரையாக்கிய தாய்… கடைசியில் தானும்! – குடும்ப பிரச்சனையால் பலியான 3 உயிர்கள்!
மதுரையில் கணவனுடனான தகராறு காரணமாக பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளையும் தீவைத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேவுள்ள மேலவாசலைச் சேர்ந்த தம்பதிகள் பாண்டி மற்றும் தமிழ்ச் செல்வி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. தம்பதிகளுக்கு வரணிஸ்ரீ (4), வர்ணிகாஸ்ரீ (2) என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட சண்டைக் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்ச் செல்வி தன் இருமகள்களையும் தீவைத்து கொன்றுவிட்டு, தானும் தீவைத்துக் கொண்டார்.
இதில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாக, தமிழ்ச்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
