வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2020 (11:05 IST)

காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள்… செய்த செயலால் பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதிகள் தற்கொலைக்கு முயன்றததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் இப்போது தண்ணீர் அதிகளவில் சென்றுகொண்டுள்ளது. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் வந்து செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக குளிப்பதற்காக தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று அங்கு வந்த வயதான தம்பதிகள் இருவர் தங்கள் நகைகளை எல்லாம் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, காவிரி ஆற்றில் இறங்கி மூழ்கியுள்ளனர். அப்போது அவர்களின் செயலை பார்த்த சக பக்தர்கள் சந்தேகமடைந்து போலிஸாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். மேலும் அவர்களைக் காப்பாற்றி கரையில் அமர வைத்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகளுடன் ஏற்பட்ட சண்டைக் காரணமாக தற்கொலை செய்துகொள்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து ஸ்ரீரங்கம் வந்ததாக தெரிவித்துள்ளனர். மகன்கள் இல்லாத தம்பதிகள் தங்கள் இரு மகள்களையும் நன்கு படிக்க வைத்து நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்துவைத்ததாகவும் இரு மகள்களோடும் நல்ல உறவு இல்லாததால் இப்படி செய்ததாகவும் சொல்லியுள்ளனர். தம்பதிகளை ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் சேர்த்துவிட்டு, கோயம்புத்தூரில் இருக்கும் மகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.