1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Man climbed upon the cell phone tower

மனைவியோடு சண்டை… அதற்கு கணவன் செய்த செயல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

செல்போன் டவர்
உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மனைவியுடனான பிரச்சனை காரணமாக கணவர் செல்போன் டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவர் செல்போன் டவர் மேல் ஏறி நின்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். அதிகாரிகள் வந்து அவரை சமாதானப்படுத்தியதும் கீழே இறங்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது ‘என் மனைவி என்னை பொய் வழக்குகளில் சிக்க வைக்க பார்க்கிறார். அவரால் நான் பெரும் மன உளைச்சலில் இருக்கிறேன். காவல்துறை என் நியாயத்தை கேட்கவில்லை. இனி நான் என் மனைவியோடு வாழ மாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.