தொடர்புடைய செய்திகள்
- உதயநிதி ஸ்டாலினை கலாய்த்து அதிமுக டுவீட்....
- எடப்பாடியார் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்: உதயநிதி
- வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி ஆளுனர் தகவல்!
- தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்
- உதயநிதியை கரூருக்கு அழைத்து சென்று அவமானப்படுத்திய செந்தில்பாலாஜி – செம கடுப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பிரச்சாரத்தின்போது கேள்வி கேட்ட பெண்ணை கிண்டல் செய்தாரா உதயநிதி?
சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கேள்வி கேட்ட பெண்ணை அவர் கிண்டல் செய்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் உதயநிதி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெண் வந்து நான் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினார். அப்போது உதயநிதி நீங்கள் எந்த வங்கியில் வாங்கினீர்கள் ஒரே வங்கியில் யார் யார் பெயரில் வாங்கினீர்கள் அதற்கான ஆவணங்களை கூறுங்கள் என்றார்
அப்போது அந்த பெண் ஆவணங்கள் இல்லை என்று கூறினார் அப்போது உதயநிதியை குறை மட்டும் சொல்ல தெரிகிறது. ஆவணங்களை எடுத்து வந்து கொடுக்க வேண்டாமா என்று கேட்டார்
அப்போது உங்கள் பெயர் என்ன என உதயநிதி கேட்டபோது அந்த பெண் தனது பெயர் தங்கம் என்று கூறினார். அப்போது உதயநிதி தங்கமே கடன் வாங்குவது என்று கூறியதும் அந்த பெண்ணை கிண்டல் செய்வது போல் உள்ளது என்று அந்த பகுதியில் உள்ள தெரிவித்துள்ளனர்
இருப்பினும் அந்தப் பெண் தகுந்த ஆதாரங்களுடன் மனு அளித்தால் அவருடைய நகை கடன் தள்ளுபடி உகந்ததாக இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
