1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:24 IST)

உதயநிதி ஸ்டாலினை கலாய்த்து அதிமுக டுவீட்....

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் சமீபத்தில் நிறவடைந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக,  எதிர்க்கட்சியன அதிமுக, தேமுதிக, ம. நீ.ம உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு பிரசாரம் செய்து வரும் திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதய ஸ்டாலின் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட சிலருடன் ஒரு டீக்கடைக்குச் சென்று மக்களுடன் அமர்ந்தனர்.

அப்போது, உதய நிதிஸ்டாலின் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் இருந்த இருவரும் கைகட்டி உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இதை அதிமுகவின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு Caption pls  கிண்டலித்துள்ளனர்.இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.