வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:42 IST)

எடப்பாடியார் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்: உதயநிதி

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார் என சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி கூறியுள்ளார். 
 
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது எடப்பாடி பழனிச்சாமிக்கு என் மீது பாசம் அதிகம் என்றும் அதனால்தான் சட்டமன்றத்தில் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார் என்றும் கிண்டலுடன் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.