ஞாயிறு, 15 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (08:20 IST)

தனித்து போட்டியிட்டாலும் விஜய் ஆட்சி அமைப்பார்? அரசியல் விமர்சர்கள் கணிப்பு..!

vijay
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' தனித்து போட்டியிடும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. சமீபத்திய மாநாடுகளில், "நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம், தனித்து நின்றாலும் வெற்றி பெறுவோம்" என விஜய் முழங்கியது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, தவெக தனித்து போட்டியிட்டால் சுமார் 25% முதல் 30% வரை வாக்கு வங்கியை பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்குச் சாதகமாக உள்ளது. ஒரு தரப்பு விமர்சகர்கள், விஜய் தனித்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறி ஆளும் திமுகவிற்கே சாதகமாகும் என கருதினாலும், மற்றொரு தரப்பினர் இது ஒரு 'நிசப்தப் புரட்சியாக' மாறி ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்கின்றனர். 
 
இதுவரை நடந்த கருத்து கணிப்புகள் திமுக முன்னிலையில் இருப்பதை காட்டினாலும், விஜய்யின் வருகை அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில், 'கிங்' ஆவாரா அல்லது 'கிங் மேக்கர்' ஆவாரா என்பது மக்களின் தீர்ப்பிலேயே உள்ளது.
 
Edited by Siva