10 கேட்கும் தேமுதிக? 5 தான் என கறாராக சொல்லும் திமுக? என்ன செய்ய போகிறார் பிரேமலதா?
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களத்தில் தொகுதி பங்கீடு குறித்த மோதல்கள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வரும் தேமுதிக, தங்களுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், கடந்த தேர்தல்களின் வாக்கு சதவீதத்தை கணக்கில் கொண்டுள்ள திமுக தலைமை, 5 இடங்களுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் மிகவும் கறாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதி பங்கீடு இழுபறியால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் கௌரவத்தை காக்க அதிக இடங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
ஒருவேளை திமுக தனது முடிவில் மாற்றம் செய்யாவிட்டால், மாற்று அணிகளை தேடி செல்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து பிரேமலதா ஆலோசித்து வருகிறார். விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு தேமுதிகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கும் அக்கட்சிக்கு, இந்த தொகுதிப் பங்கீடு ஒரு வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.
Edited by Siva