தொடர்புடைய செய்திகள்
- மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!
- உபியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்!
- பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
- பள்ளிகள் திறப்பது எப்போது? ஆலோசனைக்கு பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
பள்ளிகள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்படுமா?
இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார். இதனிடையே இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
