திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (20:50 IST)

உபியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது என்பதும் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது