1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 18 ஆகஸ்ட் 2021 (15:14 IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சற்று முன் தமிழக அரசு வெளியீட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:
 
50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும்,  மாணவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்றும், பள்ளியில் கை கழுவுவதற்கு சோப்பு கிருமிநாசினி அளிக்கவேண்டும் என்றும், பள்ளிகள் திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றும், பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் 100% தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.