1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (12:12 IST)

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் மீண்டும் மூடப்படுகிறதா பள்ளிகள்?

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

 
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
 
இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயண தடைகளை விதித்துள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 15 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது, 
 
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை என பகிரப்படும் செய்திகள் தவறானது. மழை நின்றதும் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் முழுவதுமாக செயல்படும். ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி, மார்ச் மாதம் பருவ தேர்வுகள் நடைபெறும். அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கில் கொண்டு ஆண்டு தேர்வு தேதி முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.