வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (11:53 IST)

ஒரே விடுதியை சேர்ந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா! – நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில் ஒரே விடுதியை சேர்ந்த 21 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை நீலகிரியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரியில் உள்ள தன்னார்வல தொண்டு நிறுவனத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை சோதித்ததில் 21 மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு ஊழியருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில் விடுதியில் உள்ள மற்ற மாணவிகள், ஊழியர்களுக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே விடுதியை சேர்ந்த மாணவிகள் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.