திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (16:36 IST)

விரைவில் பொதுத்தேர்வு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சி மாவட்டம் அரியமங்கலம் வரகனேரி ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதார்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் கொரொனா நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ந்டத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கான்பரன்சிங் மூலம் கருத்துக் கேட்பு நடந்து வருவதாகவும் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.