வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 மே 2021 (13:36 IST)

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு ஒன்று அளித்துள்ளது. 

 
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகிறது. ஆம், அதிமுக நிர்வாகிகள் இடையே நீண்ட நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. 
 
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாததால் வரும் 10 ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், தமிழகத்தில் மே 24 வரை, அதாவது மே 10 ஆம் தேதி முதல் (வரும் திங்கட்கிழமை) மே 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் அதிமுக கூட்டம் நடைபெறுமா எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன. 
 
இந்ந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு ஒன்று அளித்துள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி அதிமுக மனு வழங்கியுள்ளது.