செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 மே 2021 (08:20 IST)

தலைமையேற்க வாருங்கள்: அதிமுக அலுவலகம் அருகே சசிகலா ஆதரவு போஸ்டர்!

அதிமுக அலுவலகம் அருகே சசிகலா ஆதரவு போஸ்டர்!
அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் என சசிகலா ஆதரவு போஸ்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகிலேயே ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுகவில் தற்போது இருக்கும் இரட்டை தலைமையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு வருகின்றனர் என்பதும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய முடியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலையில் கட்சியை காப்பாற்ற சசிகலாவால் மட்டுமே முடியும் என்ற ரீதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகிலேயே சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன 
 
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்றும் அதிமுகவுக்கு தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் அந்த போஸ்டரில் உள்ள வாசகங்கள் குறிப்பிடப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை ஏற்க சசிகலா ஒப்புக் கொள்வாரா? அதற்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொள்வார்களா? சசிகலாவை மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்