நாடு இருக்கும் நிலையில் இந்தத் திட்டம் தேவையா? பிரதமரிடம் சிவசேனா கேள்வி
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத்தடுக்க உச்சநீதிமன்றம் தலைவிட்டு சில அதிரடி உத்தரவுகளை மத்திய அரசிற்கு விதித்துள்ளது. எனவே ஒரு ஆக்ஸியன் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது.
இந்நிலையில், மாஹாராஷ்டிர மாநில ஆளும் கட்சியும் அம்மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமை வகிக்கும் சிவசேனா, பிரதமருக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளது.
அதில், ரூ.20 ஆயிரம் கோடியில் பிரதமருக்கு புதிய இல்லம், புதிய பார்லிமெண்ட் கட்டுமான பணிகள் தொடருமா வேண்டுமா எனவும், மற்ற நாடுகளிடம் உதவிகள் கோரும் நிலையில் இருக்கும்போது,இத்திட்டத்தைத் தொடர வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.