ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (16:13 IST)

திடீரென வந்திறங்கிய மத்திய அதிவிரைவுப்படை: போராட்டங்களை ஒடுக்கவா?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே எங்குபார்த்தாலும் போராட்டமயமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்பட பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் போராடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மித்தேன் எடுக்கும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பதட்டநிலை உருவாகியுள்ளது.
 
இந்த நிலையில் இன்று திடீரென டெல்டா மாவட்டங்களில் மத்திய அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மீத்தேனுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவே மத்திய அதிவிரைவு படையினர் வந்திறங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜூ விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
டெல்டா மாவட்டங்களில் மத்திய அதிவிரைவு படையினர் வந்துள்ளது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். போராட்டங்களை ஒடுக்குவதற்காக வந்துள்ளதாக கூறப்படுவது உண்மையல்ல. அதிவிரைவு படையினர் வருகை சாதாரண நிகழ்வுதான், ஒவ்வொரு ஊராக சென்று வருகிறார்கள்' என்று கூறியுள்ளார்.