1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Permission granted to make protest in Marina

மெரினாவில் போராட்டம் நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

காவிரி விவகாரம்
காவிரி விவகாரத்தில் மெரினாவில் போராட்டம் நடத்த அய்யக்கண்ணு தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. 
 
கர்நாடகாவில் சட்ட பேரவைத்தேர்தல் நடைபெறப் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 
 
இந்த வழக்கு கடந்த 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். 
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளதால் அய்யாக்கண்ணுவிற்கு மெரினாவில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க புதிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!