வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (16:29 IST)

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்: ரைமிங்கிள் கலக்கும் ஸ்டாலின்...

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்: ரைமிங்கிள் கலக்கும் ஸ்டாலின்...
தமிழ்கத்தை ஆளும் கட்சியான அதிமுக கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என அனைத்திற்கும் பெயர் போனது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ரைமிங்காக விமர்சித்துள்ளார். 
 
எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் சென்னை சிட்டி சென்டரில் இருந்து டிஜிபி அலுவலகத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். 
 
அதாவது, குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என வலியுருத்தி இந்த பேரணி நடைபெற்றது. டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
 
இதனால், நிலைமையை சமாளிக்க போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் பின்னர் கைது செய்யப்பட்ட திமுகவினரை ஸ்டாலின் சந்தித்தார். 
கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்: ரைமிங்கிள் கலக்கும் ஸ்டாலின்...
அதன் பிறகு ஸ்டாலின் பேசியதாவது, குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும். குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மீது அதிக தவறுகள் உள்ளன. 
 
2ஜி வழக்கில் குற்றம்சாட்டபட்ட ஆர்.ராசாவை கருணாநிதி பதவி விலக சொன்னபோது அவர் அதை செய்தார். இது போன்றுதான் மாறன் சகோதரர்கள் வழக்கிலும் பதவி விலகினர். 
 
உண்மையில் மானம் இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகி, தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிருபிக்க வேண்டும். 
 
கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷனுக்கு பெயர் போனது அதிமுக ஆட்சிதான். குடகா வழக்கில் சிபிஐ விசாரணையில் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். சட்டமன்ற தேர்தல் உடனடியாக வரும் என தெரிவித்திருக்கிறார்.