1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dmk conducted Human chain protest for cauvery management board

காவிரிக்காக மனித சங்கிலி போராட்டம்: திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்பு

காவிரி மேலாண்மை
காவிரி மேலாண்மை அமைக்க கோரி திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சேர்ந்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றது.
 
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மதியம் முதல் திமுக சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூரில் இருந்து பிராட்வே வரையிலும், சுதர்சனம் தலைமையில் மூலக்கடையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனை வரையிலும், ஜெ. அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
மேலும் தஞ்சையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலும், வேலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்
பயணிகள் விமானத்தை அச்சுறுத்திய கத்தார் ராணுவ விமானம்