1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (16:15 IST)

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - முதல்வர் ஸ்டாலின்

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல செய்தும் காட்டி வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகப்பெரம்பான்மையில் வெற்றி பெற்று,  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று முதல் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு நடந்து வருகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தொடர்ந்து பலமுறை நான் செய்தும் காட்டியிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சியினுடைய மதிப்பீடு என்பது ஒழுங்கைப் பராமரிப்பதில்தான் உள்ளது. அதை அனைவரும்  உணர்ந்து செயல்பட வேண்டும்… எனத் தெரிவித்துள்ளார்.