திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (19:37 IST)

குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகி நிற்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எண்ணி கூனி குறுகி நிற்கிறேன் என முதல்வர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை கட்டுப்பாட்டை மீறி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள்.  வெற்றி பெற்றுவிட்டதாக அவர்கள் நினைக்கலாம் ஆனால் கழக தலைவர் என்ற முறையில் நான் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி நிற்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வு எந்தக் காலத்திலும் உருக்குலைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக  இருக்கிறேன் எனமு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்