புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (12:10 IST)

ஜோலார்பேட்டையிலிருந்து கிளம்பியது குடிநீர் ரயில்: வில்லிவாக்கதில் வரவேற்பு

வேலூர் ஜோலார்பேட்டையிலிருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் இன்று சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில்.

சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க, காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்தேக்க தொட்டியிலிருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டுவர, தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் படி குடிநீர் வாரிய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது அதற்கான பணிகள் நிறைவேறியதால் இன்று வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயிலில் தண்ணீர் அனுப்பப்பட்டது. மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரயில் இன்று கிளம்பியது.

ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட்ட இந்த ரயிலானது மதியம் சுமார் 1 மணியளவில் வில்லிவாக்கத்துக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லிவாக்கத்தில் ரயிலை வரவேற்க, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

ரயிலில் வரும் இந்த குடிநீரை, வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்பு சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.