வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (16:38 IST)

வேலைக்கு ஆகாத ஓபிஎஸ் மகன்...? திமுக உதவியை நாடிய ஈபிஎஸ்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்பிக்களின் உதவியை நாடியுள்ளார். 
 
இன்று நடந்த தமிழக சட்டசபையில் உத்திரமேரூர் தொகுதியில், சில டோல் ரேட்டுகள் அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருகிறது. எனவே, அவற்றை அகற்ற வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் கோரிக்கை விடுத்தார்.
 
இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை சேர்ந்தவர் அமைச்சராக இருந்தபோதுதான் சுங்கச்சாவடி வந்தது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என பெருமையாக சொல்லும் திமுகவினர் ஒரு உதவி செய்ய வேண்டும். 
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நடந்த முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஒருவர்தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே, அவர் ஒருவரால் மட்டும் இதை செய்ய முடியாது என்ற காரணத்தால் திமுக எம்பிக்களின் உதவியை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.