வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (09:58 IST)

பதவியோடு பலகையும் வந்தாச்சு... உதயநிதி ஹேப்பி!!

பதவியோடு பலகையும் வந்தாச்சு... உதயநிதி ஹேப்பி!!
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்னுக்கு பெயர் பலகை வழங்கப்பட்டுள்ளது.
 
திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் பதவு வழங்கப்பட்டது. இந்த பதவியை உதயநிதிக்கு வழங்கிய போது பல எதிர்ப்புகள் கிளம்பின. 
 
ஆனால், இந்த எதிர்ப்புகள் அனைத்திற்கும் கட்சிக்காக நான் ஆற்றும் பணி பதில் அளிக்கும் என கூறினார் உதயநிதி ஸ்டாலின். அதோடு இளைஞர் அணிக்கும் சில மாற்றங்களை கொண்டு வர சில களையெடுப்புகளை நடத்த உள்ளார். 
பதவியோடு பலகையும் வந்தாச்சு... உதயநிதி ஹேப்பி!!
இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அன்பில் மகேஷ் பெயர்ப்பலகையை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பெயர் பலகை உதயநிதி ஆபீஸை இனி அலங்கரிக்கும் என தெரிகிறது. 
 
செயலாளர் என்ர பெயர் பலகையோடு காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்ற வாசகம் பொறிக்கப்பட்ட இன்னொரு பலகையும் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.