திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (23:50 IST)

கமலாஹாரிஸ் உறவினருக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை !

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வரும் மீனா ஹரிஸுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு திரும்ப பெற வேண்டும் எனக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாடகி ரிஹானா, உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கத்துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் டெல்லியில் வசித்துவரும் மீனா ஹரிஸ் சமூக வலைதளங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கமலாஹாரிஸின் பெயரைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

இதனால், அமெரிக்க வெள்ளை மாளிகை துணை அதிபர் கமலா ஹரிஸின் பெயரைப் பயன்படுத்த வேண்டாமென மீனா ஹாரிஸுக்கு அறிவுறுத்தியுள்ளது.