திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:09 IST)

உங்க இஷ்டத்துக்கு கமலா ஹாரிஸ் பேரை யூஸ் பண்ணாதீங்க! – வெள்ளை மாளிகை வார்னிங்!

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸின் பெயரை சொந்த விளம்பரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மீனா ஹாரிஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் நின்று வெற்றிபெற்று துணை அதிபராக பதவியேற்றுள்ளவர் கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளியான இவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமலா ஹாரிஸின் மருமகளான மீனா ஹாரிஸ் சமீப நாட்களாக தனது பதிவுகளில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து மீனா ஹாரிஸுக்கு செய்தியனுப்பி உள்ள வெள்ளை மாளிகை “உங்களை பிரபலப்படுத்திக் கொள்ள கமலா ஹாரிஸ் பெயரை சமூக வலைதளங்களிலோ, வணிகரீதியாகவோ பயன்படுத்த வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.