வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:19 IST)

விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!!!

3 வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்ப பெற்றால் மட்டும்தான் பேச்சுவார்த்தைக்கு சம்பதிப்போம் என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று மத்திய அரசுடன் நடைபெற்ற 11 நாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து 68  வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். நேற்று டெல்லி
ராஜ்பவனை நோக்கி டிராக்டர் பேரணியும் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளுக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. பேச்சுவார்த்தையின் துவக்கத்திலேயே விவசாயிகள் 3 சட்டங்களை நீக்க வேண்டும் என கூறினர்.

ஆனால் எக்காரணம் கொண்டும் இச்சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம், இச்சட்டங்களை நீக்கமுடியாது. ஆனால் சில திருத்தங்கள் செய்யவுள்ளதாகக் மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இன்று மத்திய அரசுடன்  11 ஆம் கட்டமாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை  நடத்தினர்.

3 வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்ப பெற்றால் மட்டும்தான் பேச்சுவார்த்தைக்கு சம்பதிப்போம் என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்தால் இந்த 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை 1 ½ ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகக் கூறியதை விவசாயிகள் ஏற்காதது குறிப்பிடத்தக்கது.