வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (18:40 IST)

தேமுதிக கழக செயலாளர்கள் கூட்டம் எப்போது? விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி 23 ஆம் தேதி  அக்கட்சியின் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக என்ற கட்சியின் தலைவருமான விஜயகாந்த், சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுவெளியிலும், கட்சிக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை.

புத்தாண்டை ஒட்டி தன் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்த அவரை கட்சியின் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்த நிலையில், அக்கட்சியில் உட்கட்சித் தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு கூட்டம் ஆகியவற்றை நடத்துவதற்கான கழக செயலாளார்கள் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதுகுறித்து, விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் ஜனவரி 23 காலை 10 மணிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெறகிறது.

உட்கட்சி தேர்தல்இடைத்தேர்தல், செயற்குழு பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.