வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (15:38 IST)

பல்வேறு மாவட்டங்களில் 50,000 தனியார் வேலைவாய்ப்புகள்!

job
மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி  50,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாட்டத்திலும்  பணி வாய்ப்புகள், இடம், நாள் ஆகிய தகவல்கள் பின்வருமாறு.

தருமபுரியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறியல் கல்லூரியில்  வரும் ஜனவரி 21 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அரியலூரில் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகிமைபுரம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதியில் ஜனவரி  28 ஆம் தேதி  வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

விருது நகரில் ஜனவரி 28 ஆம் தேதி   அரசுக் கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

கரூரில் தான் தோணிமலையிலும், ஈரோடு மாவட்டத்தில்  நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வரும் 22 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் மொத்தம் 50 ஆயிரம் பேரை தேர்வு செய்யவுள்ளதால், 8 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள்,ஐடிஐ, ஆகியோர் தங்கள் விண்ணப்பங்களை www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கொண்டு கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.