வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2023 (15:53 IST)

அதிமுகவை ஒருங்கிணைக்க களமிறங்கும் சசிகலா.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் உடன் விரைவில் சந்திப்பு!

sasikala
அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா களமிறங்க இருப்பதாகவும் முதல் கட்டமாக அவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய நான்கு அணிகளையும் அதிமுக என்ற ஒரே கட்சியின் கீழ் இணைக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
திமுகவை வீழ்த்த அதிமுக என்ற ஒரே கட்சி மட்டுமே இருப்பதால் அந்த கட்சி பிளவு பட்டிருப்பதை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை ஒருங்கிணைத்து திமுகவை வீழ்த்தி அந்த வெற்றியை எம்ஜிஆர் இடம் சமர்ப்பிப்பேன் என்றும் சசிகலா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த முயற்சி பலன் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva