1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Governor filed a case against dmk sivaji krishnamurthy

திமுக பேச்சாளர் மீது ஆளுனர் தரப்பில் அவதூறு வழக்கு; பெரும் பரபரப்பு

Governor
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை அவமரியாதையாக கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது இதனை அடுத்து அவர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஆளுநரை அவதூறாக விமர்சனம் செய்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் உயிரிழந்த காம்பியா நாட்டு துணை அதிபர்! – இரங்கல் தெரிவித்த அதிபர்!