1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (12:42 IST)

எடப்பாடியார் வாய தொறந்தா திருவாரூர்ல ஈசியா ஜெயிச்சிருவோம்; புகழேந்தி நக்கல்

திருவாரூரில் முதல்வரும், துணை முதல்வரும் பிரச்சாரம் செய்தாலே ஈசியாக ஜெயித்துவிடுவோம் என அமமுக ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. கஜா புயல் நிவாரணத்தை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்து அந்தந்த கட்சிகள் மும்மரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
 
இந்நிலையில் திருவாரூர் தேர்தல் குறித்து பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, திருவாரூர் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியாரும், பன்னீர்செல்வமும் வாய தொறந்தா போதும், அமமுக ஈசியா ஜெயித்துவிடும் என பேசினார்.
 
சில சமயங்களில் ஓப்பனாக பேசுவதாக நினைத்து எடப்பாடியார், பேசுவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகும். இதனை மனதில் வைத்து தான் புகழேந்தி இப்படி பேசியிருப்பார் போலும்.