வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (20:11 IST)

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் இவர்கள்தானா..?

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அவரது தொகுதியான திருவாரூர் காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
மேலும், உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அவர் ரசிகர் மன்றத்தினரும் விருப்பமனு வழங்கியுள்ளனர். ஆனால், ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தேர்தலுக்கு முதல் நாள்தான் சென்னை திரும்புகிறாராரம்.
 
அதேபோல், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 52 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க நாளை அதிமுக ஆட்சிக்குழு கூடுகிறது. 
இந்நிலையில் திமுக, அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக வட்டாரத்தில் திருவாரூரில் வலுவான வேட்பாளர் என்பதைத் தாண்டி அனுபவமிக்க வேட்பாளராக உள்ளவர் பூண்டி கலைவாணன். திருவாரூர் தொகுதியை முற்றும் அறிந்தவர், எனவே பூண்டி கலைவாணன்தான் திமுக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். 
 
அதிமுகவை பொறுத்தவரை திமுகவை தோற்கடிக்க பலமான வேட்பாளரை நிறுத்த உள்ளனராம். அப்படி பார்க்கையில், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைத்தியலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வைத்தியலிங்கம் பிரபலமானவர் என்பதால் வெல்ல வாய்ப்புள்ளது என அதிமுக தலைமை கணக்கு போடுகிறதாம்.