செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (15:28 IST)

பிறந்தவுடனே திமுக உறுப்பினராகிவிட்டாரா உதயநிதி? நெட்டிசன்கள் கிண்டல்

பிறந்தவுடனே திமுக உறுப்பினராகிவிட்டாரா உதயநிதி? நெட்டிசன்கள் கிண்டல்
திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் விருப்பமனு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த விருப்பமனுவின் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

அந்த மனுவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த வருடம் 1977 என்றும், அவர் திமுகவில் உறுப்பினரான வருடம் 1977 என்றும் உள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் பிறந்தவுடனே திமுக உறுப்பினராக மாறிவிட்டதை இந்த விருப்பமனு குறிப்பிடுகிறது.

மேலும் இந்த விருப்பமனுவில் உதயநிதி ஸ்டாலின் 1977ல் இருந்து களப்பணிகள் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை ஒரு கட்சிக்கு களப்பணி எப்படி செய்யும் என்று புரியாமல் நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.

பிறந்தவுடனே திமுக உறுப்பினராகிவிட்டாரா உதயநிதி? நெட்டிசன்கள் கிண்டல்
இது விருப்பமனு செய்தவர்கள் பூர்த்தி செய்வதில் செய்த தவறா? அல்லது போட்டோஷாப் மூலம் யாராவது எடிட் செய்து வெளியான போலி புகைப்படமா? என்பதை உதயநிதி ஸ்டாலின் தரப்பு விளக்கம் வேண்டும் என்ற கோரிக்கை நெட்டிசன்கள் தரப்பில் இருந்து வெளியாகி வருகிறது.