செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (04:11 IST)

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம்: அர்ஜூன் சம்பத்

சமீபத்தில் கவர்னர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பெரும்பாலானோர் விஜயேந்திரருக்கு எதிராகவும், ஒருசிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் இதுகுறித்து கூறியபோது, 'தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை கிறிஸ்துவ மிஷனரிகள் சொல்வதைக் கேட்டு நடந்தவர் என்றும் இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய தமிழ்த்தாய் பாடலாக  பாரதி, குமரகுருபரர், வள்ளலார் பாடல் பயன்படுத்தப்படும்'' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் அர்ஜூன் சம்பத் கருத்தை யாரும் சீரியஸாக எடுத்து கொண்டது போல் தெரியவில்லை