1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜனவரி 2018 (18:12 IST)

‘நீராரும் கடலுடுத்த’ தமிழ் பாடலே அல்ல - இது அர்ஜூன் சம்பத்

தற்போது தமிழ் தாய் வாழ்த்தாக பாடப்படும் நீராரும் கடலுடுத்த பாடல் தமிழ் பாடலே அல்ல என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

 
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து மரியாதை செய்யாமல் இருந்து விட்டு, தேசிய கீதம் பாடியபோது எழுந்து நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர் ஒருவருக்கு பேட்டியளித்த அர்ஜூன் சம்பத் “வேண்டுமென்றே விஜயேந்திரர் இப்படி செய்திருக்க மாட்டார். கவனக்குறைவில் இப்படி நடந்திருக்கலாம். மேலும், வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு என்ற பாரதியாரின் வரிகள்தான் தமிழ் தாய் வாழ்த்தாக முன்பு பாடப்பட்டது. 
 
கருணாநிதி முதல்வராக இருந்த போது மனோன்மணியம் பெ. சுந்தரனாரின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றினார். இப்பாடலில் திராவிடநல் திருநாடும் என்ற வரி வருகிறது. தமிழ்தாய் வாழ்த்தில் ஏன் திராவிடம் வருகிறது?. மேலும், ஆரியம்போல் வழக்கொழிந்து என்ற வரி வருகிறது. எனவே, இது இந்திய ஒருமைப்பாடு மற்றும் பிராமணர்களுக்கு எதிரானது. இப்படியிருக்க இதை எப்படி தமிழ் தாய் வாழ்த்தாக ஏற்போம்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.