திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (15:33 IST)

குட்கா விவகாரம் : அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் கைது?

குட்கா விவகாரத்தில் குடோன் உரிமையாளர் மாதவராவ் அப்ரூவராக மாறியுள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்நேரமும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ ரெய்டு நடத்தியது.   
 
நேற்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் 7 சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரமாக சோதனை நடத்தியதாகவும் இந்த சோதனையின் முடிவில், 2 பைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று காலை அவரின் வீட்டில் சோதனை முடிவிற்கு வந்தது.  
 
இந்த விவகாரம் அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிஜிபி ராஜேந்திரன், சுகாதரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அதற்கான நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில், சிபிஐ வசம் வசமாக சிக்கியுள்ள  குடோன் உரிமையாளர் மாதவ ராவ் அப்ரூவராக மாறியுள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.