வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (11:17 IST)

சோபியாவை அந்த வார்த்தை சொல்லி திட்டிய பாஜகவினர் - விளக்கம் அளிப்பாரா தமிழிசை?

விமானத்தில் பாஜகவிற்கு எதிராக முழக்கம் எழுப்பிய சோபியாவை தமிழிசை உடன் இருந்த பாஜகவினர் அசிங்கமாக திட்டிய விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.

 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், சமூகவலைத்தளங்களில் சோபியாவிற்கு ஆதரவாகவே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழிசைக்கு எதிராக போலீசாரிடம் புகார் அளித்துள்ள சோபியாவின் தந்தை, பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவை, தமிழிசையுடன் இருந்த பாஜகவின் ‘ தேவி...யா. வெளியே வெளியா வா உன்னை கொல்லாமல் விடமாட்டோம்’ என அசிங்கமான வார்த்தைகளில் திட்டியதாக கூறியுள்ளார். மேலும், தன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழிசை மற்றும் அவருடன் இருந்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
தன் கட்சிக்கு எதிராக சோபியாக முழக்கமிட்டது தவறு எனில், சோபியாவை பாஜகவினர் மோசமான வார்த்தைகளால் பேசியது மட்டும் எப்படி சரி? 
 
அப்படிப்பட்ட வார்த்தையை உடனிருந்தோர் பயன்படுத்தியபோது ஒரு பெண் தலைவராக இருந்தும் தமிழிசை அதை ஏன் கண்டிக்கவில்லை?
 
குறைந்த பட்சம் இதுபற்றி விளக்கமோ அல்லது வருத்தமாவது தமிழிசை தெரிவிப்பாரா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.