திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (08:07 IST)

தேவாலயத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை கைது

பிரான்ஸில் தேவாலயத்தில் நடிகை ஒருவர் நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸை சேர்ந்த நடிகை டெபோரா டி ராபர்டிஸ் அங்குள்ள லூர்து தேவாலயத்திற்கு சென்று அங்குள்ள குகை வாயில் ஒன்றின் முன்பாக சென்று தனது ஆடைகள் அனைத்தையும் களைத்துவிட்டு, உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்தார். 
 
இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அந்த நடிகையின் மீது துணியை வீசி, துணியை போடுமாறு வற்புறுத்தினர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நடிகையை கைது செய்தனர். ஒரு தேவாலயத்தின் முன்பு இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொள்ளலாமா என நடிகைக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.