காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள் - பிரம்படி கொடுத்த போலீஸார்

women
Last Updated: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (12:09 IST)
மலேசியாவில் இளம்பெண்கள் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் டிரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து  போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த இரு பெண்மணிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்கள் இருவரும் குற்றவாளியென தீர்ப்பளித்தனர். இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு 6 தடவை பிரம்படி கொடுக்க உத்தரவிடப்பட்டது.
 
அதன்படி அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. மலேசியாவில் பெண்களுக்கு இவ்வாறு தண்டனை கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், மக்களை துன்புறுத்தவோ காயப்படுத்தவோ இந்த தண்டனை வழங்கப்படவில்லை, இவ்வாறு இனி நடக்கக்கூடாது என பொதுமக்களுக்கு உணர்த்தவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :