புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 செப்டம்பர் 2018 (10:41 IST)

குட்கா விவகாரம்; விஜயபாஸ்கர், ஜார்ஜ் வீட்டில் சோதனை : சிபிஐ அதிரடி

குட்கா விவகாரத்தை கையிலெடுத்துள்ள சிபிஐ விஜயபாஸ்கர் வீடு, காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தை லஞ்ச ஒழுப்புத்துறை விசாரித்து வந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் எம்.எல்.ஏ அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பேனர்ஜி இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, குட்கா அதிபர் மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு மற்றும் தமிழகமெங்கும் 40 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.