1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakanth will start campaign today

இன்று பிரச்சாரத்தைத் தொடங்கும் விஜயகாந்த்!

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அணியில் இணைந்து இருக்கும் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கிடைத்திருக்கும் நிலையில் தற்போது பிரேமலதா மட்டுமே 60 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் தேமுதிக தலைவரான விஜயகாந்த் கூட போட்டியிடவில்லை என்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்த கேப்டன் விஜயகாந்த் இன்று முதல் 5 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக ஓய்வில் இருக்கும் அவரைக் காண அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஜி எஸ் டி வரிக்குள் பெட்ரோல், டீசல்… விவாதிக்க தயாராக இருக்கிறோம் –நிர்மலா சீதாராமன் பேச்சு!