செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நான் நடிக்க வேண்டும் என்றால் டிக்கெட் வாங்க வேண்டும்: பிரச்சார மேடையில் கமல் பேச்சு!

என்னிடம் நடிக்க சொல்லிக் கேட்க வேண்டாம் என்றும் தான் நடிக்க வேண்டுமென்றால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார் 
 
கோவை பீளமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரித்து கமல்ஹாசன் பேசினார். அப்போது கீழே இருந்த சிலர் சதிலீலாவதி திரைப்படத்தில் பேசியது போன்று கொங்கு தமிழில் பேசுமாறு கேட்டனர். அப்போது கமல் தான் இங்கு நடிக்க வரவில்லை எனக் கூறியதுடன் தான் நடிக்க வேண்டும் என்றால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க வேண்டும் என தெரிவித்தார்
 
இது குறித்து அவர் மேலும் பேசிய போது 'நான் இங்கே நடிக்கவில்லை இங்கே உங்களுடைய எதிர்காலம் குறித்து பேச வந்திருக்கிறேன். உங்களுக்கு என்னுடைய நடிப்பை பார்க்க வேண்டுமென்றால் வீட்டில் போய் யூடியூபில் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நான் இங்கே ஆட வேண்டும் பாட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு டிக்கெட் வாங்குங்கள் என்று சற்றே கோபமாக கமல்ஹாசன் பேசியது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது