1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (12:51 IST)

எனக்கு சுகர் இருக்கு, பிரஷர் இருக்கு: அனுதாப ஓட்டு சேகரிக்கும் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தேர்தல் பிரச்சார மேடையில் பேசும்போது ’எனக்கு சுகர் இருக்கிறது, எனக்கு பிரஷர் இருக்கிறது, உடம்பில் கோளாறு இருக்கிறது, மாத்திரையை போட்டுக் கொண்டுதான் பணி செய்து கொண்டிருக்கிறேன்
 
ஆனால் உடம்பில் வெறி இருக்கிறது. இயேசுநாதர் சிலுவையைச் சுமந்து போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கின்றேன்’ என்று உருக்கமாகப் பேசினார். இதனையடுத்து அவர் அனுதாபத்தின் மூலம் ஓட்டுகளை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் விஜயபாஸ்கரின் இந்த உருக்கமான பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அட!அட!வருஷத்துக்கு 25-40 நாட்கள் மட்டும் நூறுநாள் வேலை,கோழி கூட சாப்பிடாத ரேஷன் அரிசி,நீங்களே போட்டு ஒரு வருஷத்துல பிஞ்சுபோன சாலைகள்.உங்க சொத்துமட்டும் விலைவாசியவிட வேகமா ஏறியிருக்கு.ஆனால் விராலிமலை தொகுதி நலிந்துகிடக்கிறது.நீங்க சிலுவை சுமந்த லட்சணம்! தோல்விபயம் என்பது இதுதான்!