1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (17:50 IST)

அதிமுக எம்.பி தேர்தல் பிரச்சாரத்தின்போது மரணம்!

அதிமுக ராஜ்யசபா எம்பி எம்பி.முகமது ஜான் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார்.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக நேற்று தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜ்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர்  எம்பி.முகமது ஜான்.இன்று அதிமுவுக்கு ஆதரவாக வாலாஜா அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியேயே அவர் உயிரிழந்தார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபைத்தேர்தலில் ராணிப்பேட்டைத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்று பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவருக்கு அதிமுகவின் மற்றும் அமைச்சர் அஞ்சலிசெலுத்தி வருகின்றனர்.