1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijayakanth discharge from hospital

மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் .. நலமுடன் இருப்பதாக தகவல்!

vijayakanth
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் வீடு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தற்போது விஜயகாந்து உடல்நலம் சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது
 
ஏற்கனவே நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரது சர்க்கரை அளவு சரியான அளவில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது 
 
விஜயகாந்த் அவர்கள் ரீசார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி தேமுதிக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: கன மழையால் மோசமாகி வரும் மீட்பு நடவடிக்கைகள்