தொடர்புடைய செய்திகள்
- விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? நேரம் ஒதுக்கி விசாரித்த மோடி!
- அன்பு சகோதரர் விஜயகாந்த் குணமாக வேண்டும்: ஈபிஎஸ் வாழ்த்து!
- ”விஜயகாந்த் பூரண குணமடைய வீடு திரும்ப விரும்புகிறேன்…” நடிகர் கமல்ஹாசன் ட்வீட்!
- விஜயகாந்த் விரைவில் குணமடைய ரஜினிகாந்த் பிரார்த்தனை!
- விஜயகாந்த் நலம்பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வீடு திரும்பும் கேப்டன்? உடல்நிலையில் முன்னேற்றமா??
கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் அவர் பங்கேற்றாலும் எதுவும் பேசாமல் அமர்ந்தே இருப்பார். சமீப காலமாக அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் உடல்நல குறைவால் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இந்த செய்தி அவரது தொண்டர்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத்தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.
