தொடர்புடைய செய்திகள்
- இலங்கை தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி! – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு!
- இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே நிரந்தர தீர்வு: பிரேமலதா விஜயகாந்த்
- அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியில்லை: விஜயகாந்த்
- இளையராஜா - மோடி விவகாரம் குறித்து விஜயகாந்த் டுவிட்!
- பீஸ்ட் படத்தில் இப்படி காட்டியிருக்க கூடாது! – பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பேனருக்கு தீ வைப்பு: அதிர்ச்சி தகவல்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பேனருக்கு தீ வைப்பு: அதிர்ச்சி தகவல்
சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பேனருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தேமுதிக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் பேனர் மற்றும் தண்ணீர் பந்தலுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதனையடுத்து தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விஜயகாந்த் பேனருக்கு தீ வைத்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
